கடலூர் கட்டட விபத்து - ரூ.2 லட்சம் நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு

கடலூர் கட்டட விபத்தில் உயிரிழந்த 2 சிறுவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
x
கடலூர் அருகே பழைய அரசு கட்டடம் இடிந்து விழுந்ததில், இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், உயிரிழந்த 2 சிறுவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், . 

"பழைய கட்டடம் இடிந்து விழுந்ததில், இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவத்தை கேட்டு துயரம் அடைந்தேன்", உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். உயிரிழந்த 2 சிறுவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். 

மேலும், விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சிறுவனின் குடும்பத்தாருக்கு ரூ.50,000 வழங்கப்படும். விபத்தில் காயமடைந்த சிறுவனுக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தர விட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்