தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை - அமைச்சரை நேரில் சந்தித்த ரிசர்வ் வங்கி இயக்குநர்

தமிழ்த் தாய் வாழ்த்து அவமதிப்பு சர்ச்சையான நிலையில், ரிசர்வ் வங்கி மண்டல இயக்குநர், தமிழக நிதி அமைச்சரை நேரில் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.
x
சென்னை ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு ரிசர்வ் வங்கி அலுவலர்கள் எழுந்து நிற்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தமிழக நிதியமைச்சரான பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனை, தலைமைச் செயலகத்தில் ரிசர்வ் வங்கி மண்டல இயக்குநர் எஸ்.எம்.சாமி நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார். இதையடுத்து இந்த சர்ச்சை குறித்து இன்று மாலை ரிசர்வ் வங்கி சார்பில் விரிவான அறிக்கை வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்