"நெல் கொள்முதலுக்கு ஆன்லைன் முன்பதிவை ரத்து செய்க" - எடப்பாடி பழனிசாமி

நெல் கொள்முதல் செய்ய ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்ற உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரியுள்ளார்.
x
நெல் கொள்முதல் செய்ய ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்ற உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரியுள்ளார்.அவர் விடுத்துள்ள அறிக்கையில், பல்வேறு சிரமங்களுக்கு இடையே உற்பத்தி செய்யும் நெல் மணிகளை, ஆன்லைன் முன்பபதிவு கோருவதால் உரிய நேரத்தில் விற்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் பதிவுக்கான ஆவணங்களை பதிவேற்றம் செய்வதில் விவசாயிகளுக்கு சிரமம் இருப்பதாகவும், பிறர் உதவியை நாடி பதிவு செய்ய வேண்டியுள்ளதால், காலதாமதம் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ள ஈ.பி.எஸ்,

பிப்ரவரி மாதத்தில் 30 லட்சம் மெட்ரிக் டன் நெல் மணிகள் விற்பனைக்கு வரவுள்ள சூழ்நிலையில், ஆன்லைன் முன்பதிவு உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். 

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அதிக அளவில் திறக்க வேண்டும், தார்ப் பாய், சாக்கு, சணல் பொருட்களை அதிகளவில் இருப்பு வைத்து வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ள ஈ.பி.எஸ்.,

 விவசாயிகளின் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துவதாக கூறியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்