கொப்பரை தேங்காய் கொள்முதல் :"கிலோ ஒன்றிற்கு ரூ.105.90 நிர்ணயம்" - வேளாண்மைத்துறை உத்தரவு

வேளாண் தொழில் திட்டத்தின் அடிப்படையில் கொப்பரை தேங்காயை ஒழுங்குமுறை விற்பனை நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேளாண்மைத்துறை உத்தரவிட்டுள்ளது.
கொப்பரை தேங்காய் கொள்முதல் :கிலோ ஒன்றிற்கு ரூ.105.90 நிர்ணயம் - வேளாண்மைத்துறை உத்தரவு
x
வேளாண் தொழில் திட்டத்தின் அடிப்படையில் கொப்பரை தேங்காயை ஒழுங்குமுறை விற்பனை நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேளாண்மைத்துறை உத்தரவிட்டுள்ளது.

 2022ம் ஆண்டு முதல் அடிப்படை ஆதாரவிலையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 51 ஆயிரம் மெட்ரிக் டன் கொப்பரை தேங்காயை  கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டதோடு, கிலோ ஒன்றிற்கு 105 ரூபாய் 90 பைசாவிற்கும் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டது. இதன் அடிப்படையில், தேசிய வேளாண் தொழில் திட்டத்தின் கீழ்  42 மையங்கள் மூலமாக கொப்பறை தேங்காய்கள் கொள்முதல் செய்து விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், கொள்முதல் செய்யப்படும் கொப்பரை தேங்காய்களை மத்திய மாநில சேமிப்பு கிடங்குகளில் பாதுகாப்பாக வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதோடு,விவசாயிகளிடம் இருந்து வாங்கும் பொருட்களை பாதுகாப்பாக வைக்க கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது எனவும் வேளாண்மைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்