கடலில் 19 கி.மீ. தூரத்தை நீந்தி 8 வயது சிறுமி சாதனை

சென்னை காரப்பாக்கத்தை சேர்ந்த 8 வயது சிறுமி தாரகை ஆராதனா, Save The Ocean என்பதை வலியுறுத்தி 19 கிலோ மீட்டர் தூரத்தை கடலில் நீச்சல் அடித்து உலக சாதனை புரிந்துள்ளார்.
x
சென்னை காரப்பாக்கத்தை சேர்ந்த 8 வயது சிறுமி தாரகை ஆராதனா, Save The Ocean என்பதை வலியுறுத்தி 19 கிலோ மீட்டர் தூரத்தை கடலில் நீச்சல் அடித்து உலக சாதனை புரிந்துள்ளார். அரவிந்த் தருண் என்பவரது மகளான சிறுமி தாரகை ஆராதனா,  கடலில் பிளாஸ்டிக் கழிவுகளால் பல்வேறு உயிரினங்கள் பாதிக்கப்படுவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த சாதனை புரிந்துள்ளார். கோவளம் கரிகாட்டுக் குப்பன் முதல் நீலாங்கரை வரை 19 கிலோ மீட்டர் தூரத்தை 6 மணி நேரம், 14 நிமிடங்களில் கடந்து வந்து சாதித்துள்ளார்.  இந்த சாதனை அசிஸ்ட் வோல்டு ரெக்கார்டு என்ற உலக சாதனை நிறுவனம் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியது. சான்றிதழை விஜிபி குழுமத்தின் தலைவர் வி.ஜி. சந்தோஷம் வழங்கினார். இலங்கையிருந்து இந்தியா வரை கடலில் நீந்துவது தான் தமது இலக்கு என சிறுமி தாரகை ஆராதனா கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்