புதிய மருந்துகள் சோதனைக்கு அனுமதி

புதிய மருந்துகள் சோதனைக்கு தமிழக சுகாதாரத்துறை அனுமதி அளிப்பதற்கான குழுவிற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
x
புதிய மருந்துகள் சோதனைக்கு தமிழக சுகாதாரத்துறை அனுமதி அளிப்பதற்கான குழுவிற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.மருந்து நிறுவனங்கள் புதிய மருந்து மற்றும் தடுப்பூசியை சோதனை செய்ய மத்திய அரசின் மருந்து கட்டுப்பாடு தரநிர்ணய ஆணையத்திடம் அனுமதி பெற்றுள்ள  குழுவிடம் சமர்ப்பித்து  அனுமதியை பெற வேண்டும். அவ்வாறு அனுமதி பெறாமல் எந்தவித புதிய மருந்து சோதனைகளையும் செய்ய முடியாது. இந்நிலையில் இதுபோன்ற சோதனைகளுக்கு அனுமதி அளிப்பதற்கான தமிழக சுகாதார குழுவிற்கு  மத்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. தமிழக பொது சுகாதாரத் துறை சார்பில் அதன் இயக்குனர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவிற்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டு தரநிர்ணய அமைப்பு அனுமதி அளித்துள்ளது.இந்த அனுமதியை தொடர்ந்து தமிழக பொது சுகாதாரத் துறை எந்தவித புதிய மருந்து சோதனைகளையும் தங்களுக்கு கீழ் உள்ள மருத்துவமனைகள் மேற்கொள்ளலாம்.இதேபோன்று பொது சுகாதாரத் துறையில் பணியாற்றும் மருத்துவர்கள் தங்களின் ஆராய்ச்சிப் பணிகளையும் இந்த குழுவிடம் அனுமதி பெற்று மேற்கொள்ளலாம்.

Next Story

மேலும் செய்திகள்