எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 27ம் தேதி ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
x
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு  வரும் 27ம் தேதி ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன்  தெரிவித்துள்ளார்.

மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட 24 ஆயிரத்து 949 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக கூறினார். அரசு பள்ளி மாணவர்களுக்கான 7புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 534 இடங்கள் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார். இதில் 437 எம்பிபிஎஸ் இடங்களும் 97 பல் மருத்துவ இடங்களும் அடங்கும் என தெரிவித்தார். இந்தாண்டு எம்பிபிஎஸ் படிப்புகளுக்கு 37 அரசு மருத்துவ கல்லூரிகளில் 5ஆயிரத்து 175 இடங்களும், 2 அரசு பல் மருத்துவ கல்லூரிகளில்  200 இடங்களும் உள்ளதாக தெரிவித்தார். மாநில ஒதுக்கீட்டிற்கு 4 ஆயிரத்து 319 எம்பிபிஎஸ் இடங்களும், 170 பல் மருத்துவ இடங்களும் உள்ளதாக கூறினார்.




Next Story

மேலும் செய்திகள்