புல்லட்டை திருடிச் சென்ற காதல் ஜோடி - மற்றொரு ஜோடியை நிறுத்தி வைத்து விட்டு அபேஸ்

சேலத்தில் 25 ஆயிரம் ரூபாயை முன்பணமாக கொடுத்து விட்டு ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புல்லட்டை திருடிச் சென்ற காதல் ஜோடியை போலீசார் தேடி வருகின்றனர்.
x
சேலம் டவுன் சாந்தி திரையரங்கம் அருகே பழைய இருசக்கர வாகனம் விற்பனை செய்யும் கடையை பாலாஜி என்பவர் நடத்தி வருகிறார். இவரது கடையில் கடந்த 21 ஆம் தேதி புல்லட்டை வாங்குவதற்காக  இரண்டு இளம்ஜோடிகள் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அப்போது ஒரு லட்சத்து 60 ஆயிரத்திற்கு புல்லட்டை தேர்வு செய்த அவர்கள், ஓட்டி பார்த்து விட்டு தருவதாக கூறி வாகனத்தை எடுத்துச் சென்றுள்ளனர். அப்போது தங்களுடன் வந்த மற்றொரு ஜோடியையும், தாங்கள் வந்த 2 வாகனங்களையும் நிறுத்தி விட்டு சென்றுள்ளனர். இதனிடையே அவர்கள் திரும்பி வராததை அறிந்த கடை தரப்பு, அங்கே இருந்த மற்றொரு ஜோடியிடம் விசாரித்தது. மேலும் டவுன் குற்றப்பிரிவு காவல் நிலையத்திலும் அவர்கள் புகார் அளித்தனர். இதுகுறித்த வீடியோ காட்சிகளும் இணையத்தில் பரவிய நிலையில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது 2 பெண்களும் சகோதரிகள் என்பதும், அவர்கள் தங்கள் காதலருடன் வந்ததும் தெரியவந்தது. முன் பணமாக 25 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்து விட்டு வாகனத்தை எடுத்துச் சென்றதும் உறுதியான நிலையில் மீதமுள்ள பணத்தை பெண்ணின் தாய் தருவதாக உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்