தொழிலதிபர் தன்ராஜ் கோச்சாரின் சொத்துகள் முடக்கம் - அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி

சென்னையை சேர்ந்த தொழிலதிபர் தன்ராஜ் கோச்சார் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான 69 கோடியே14 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கி உள்ளது.
x
சென்னை மத்திய குற்றப்பிரிவில் 10 க்கும் மேற்பட்ட நில அபகரிப்பு வழக்கு தன்ராஜ் கோச்சார் மீது உள்ளது.வட்டிக்கு பணம் கொடுப்பதாக கூறி நிலத்தை அபகரித்து சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறையில் புகார் கொடுத்ததை அடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் அமலாக்கத் துறையினர் தன்ராஜ் கோச்சாருக்கு சொந்தமான பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து இந்த சொத்துகளை அமலாக்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்