இரு தரப்பினர் இடையே விரோதம்... 1000 போலீசாரின் பாதுகாப்பில் நடக்கும் விளையாட்டு

சங்கரன்கோவிலில் இருதரப்பினரிடையே பிரச்சினை நிலவி வரும் நிலையில், விளையாட்டு போட்டி நடத்துவதற்காக ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்..
x
சங்கரன்கோவிலில் இருதரப்பினரிடையே பிரச்சினை நிலவி வரும் நிலையில், விளையாட்டு போட்டி நடத்துவதற்காக ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்..

குறிஞ்சாங்குளம் கிராமத்தில் இருவேறு சமூகத்தினர் இடையே பல வருடங்களாக பிரச்சினை  இருந்து வருகிறது. இதனிடையே கடந்த மாதம் ஒரு தரப்பு விளையாட்டு போட்டி நடத்துவதற்கு மற்றொரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால், ரேசன் கார்டு ,ஆதார் கார்டுகளை திருவேங்கடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்து எதிர் தரப்பினர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, போட்டி நடத்திக்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. தற்போது எதிர் தரப்பினர் விளையாட்டு போட்டி நடத்துவதற்காக நெல்லை மண்டல ஐஜி தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் 10 க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  ஆனால், விளையாட்டு போட்டி நடத்த எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு சமூகத்தை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்