ஓட்டி பார்ப்பதாக சொல்லி பைக்கை திருடி சென்ற காதல் ஜோடி

சேலத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டி பார்த்து வருவதாக கூறி, வாகனத்துடன் மாயமான காதல் ஜோடியை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.
x
சேலத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டி பார்த்து வருவதாக கூறி, வாகனத்துடன் மாயமான காதல் ஜோடியை காவல்துறையினர்  வலை வீசி தேடி வருகின்றனர்.

சேலம் டவுன், சாந்தி தியேட்டர் பகுதியில் ராம்சரண் என்பவர் பழைய இருசக்கர வாகனம் விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார். அவரது கடைக்கு வந்த 2 காதல் ஜோடிகள் வாகன தேர்வில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அதில் ஒரு ஜோடி ஒரு லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான இருசக்கர வாகனத்தை தேர்வு செய்துள்ளது. பின்னர் வாகனத்தை ஓட்டிப் பார்க்க வேண்டும் என அந்த ஜோடி கடையின் உரிமையாளரிடம் கூறியுள்ளது. கடை உரிமையாளரும்  அவர்களுடன் வந்த மற்றொரு ஜோடி இருக்கிறது என்ற தைரியத்தில் வண்டியை ஓட்டிப்பார்க்க அனுமதித்துள்ளார். இதனை தொடர்ந்து வண்டியுடன் வெளியே சென்ற காதல் ஜோடி நீண்ட நேரமாகியும் வராததால் சந்தேகம் அடைந்த ராம்சரண், அங்கிருந்த மற்றொரு ஜோடியிடம் விசாரணை நடத்தியுள்ளார். வாகனத்துடன் மாயமானவர்களை யார் என்றே தெரியாது என அவர்கள் கூறியதை தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த ராம்சரண், அவர்களை பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில் மாயமான வண்டியில் சென்ற பெண்ணை மட்டும் தெரியும் என கடையில் இருந்த காதல்ஜோடி ஒத்துக்கொண்டுள்ளது. மேலும் அவர்கள் கொடுத்த விவரங்களின் அடிப்படையில் வண்டியுடன் மாயமானது கிருஷ்ணகிரி அருகேயுள்ள குப்பத்தை சேர்ந்த பிரவின்குமார் என தெரியவந்தது. இதனை தொடர்ந்து சேலம் மாநகர குற்றப்பிரிவு போலீசார் வண்டியை எடுத்து சென்ற காதல் ஜோடியை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்