"மாஸ்க்கும் போட மாட்டேன்.. அபராதமும் செலுத்த மாட்டேன்..!!" - போலீசாருடன் வாக்குவாதம் செய்த நபர்

புதுக்கோட்டையில் முக கவசம் அணியாமல் வந்த நபர் ஒருவர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
x
பொது இடங்களில் கிருமி நாசினி தெளிப்பு 
முகக்கவசம் அணியாமல் போலீசாருடன் வாக்குவாதம் 
முகக்கவசம் அணியாதவரிடம் ரூ.500 அபராதம் வசூல்

முழு ஊரடங்கையொட்டி, புதுக்கோட்டையில் பொது இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது முக கவசம் அணியாமல் வந்த நபர் ஒருவர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும், முகக்கவசம் அணிவது எனது சுதந்திரம் என்று தெரிவித்த அந்த நபரிடம், தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை காண்பித்து, போலீசார் ஐந்நூறு ரூபாய் அபராதம் வசூலித்தனர். இருந்த போதும் அந்த நபர் முகக்கவசம் அணிய மாட்டேன், அபராதம் செலுத்த மாட்டேன் என தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்