முன்னாள் அமைச்சர் வீட்டுக்கு திடீரென சென்ற ஈ.பி.எஸ்

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டிற்கு எடப்பாடி பழனிசாமி நேரில் சென்றார்.
x
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டிற்கு எடப்பாடி பழனிசாமி நேரில் சென்றார். 

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகனுக்கு சொந்தமான 58 இடங்களில் கடந்த 20 ம் தேதி லஞ்ச ஓழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, கணக்கில் வாரத 6.6 கிலோ தங்கம், 14 கிலோ வெள்ளி பொருட்கள், 2 கோடியே 65 லட்ச ரூபாய் ரொக்கம், முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக, லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்திருந்தது. இந்த நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே கெரகோடஅள்ளி கிராமத்தில் உள்ள கே.பி அன்பழகனின் வீட்டிற்கு நேரில் சென்றார். சுமார் அரை மணி நேரம் கே.பி அன்பழகனிடம் பேசிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அப்போது, அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர். 


Next Story

மேலும் செய்திகள்