குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் 101 பேருக்கு

நீலகிரியில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் 101 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
x
குன்னூர் வெலிங்டன் பகுதியில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில் ராணுவ உயர் அதிகாரிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த நிலையில் வெளி நாடுகளில் இருந்து வந்த ராணுவ அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அண்மையில் டில்லி , ஐதரபாத், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று திரும்பியவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சுமார் 600 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 101 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து ராணுவ உயர் அதிகாரிகள் உட்பட 63 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்