கிராமத்தில் ஏற்பட்ட கலவரம் - உயிரிழந்த மூதாட்டியின் உடலை சுமந்து சென்ற பெண்கள்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தாலுகா வீரளூர் கிராமத்தில் சுடுகாட்டு பாதை தொடர்பான பிரச்சினை நீடித்து வருகிறது. அருந்ததியின மக்கள் செல்லும் சுடுகாட்டு பாதை புதர் மண்டி இருப்பதாக கூறி, பொது சாலை வழியாக எடுத்துச் செல்ல கலசபாக்கம் தாசில்தார் ஜெகதீசன் பரிந்துரையின்பேரில், ஆரணி கோட்டாட்சியர் கவிதா அனுமதி வழங்கினார்
x
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தாலுகா வீரளூர் கிராமத்தில் சுடுகாட்டு பாதை தொடர்பான பிரச்சினை நீடித்து வருகிறது. அருந்ததியின மக்கள் செல்லும் சுடுகாட்டு பாதை புதர் மண்டி இருப்பதாக கூறி, பொது சாலை வழியாக எடுத்துச் செல்ல கலசபாக்கம் தாசில்தார் ஜெகதீசன் பரிந்துரையின்பேரில், ஆரணி கோட்டாட்சியர் கவிதா அனுமதி வழங்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் தகராறில் ஈடுபட்டனர். அப்போது அருந்ததிய மக்களின் வீடுகள், வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதனிடையே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விவகாரத்தில் இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஊரில் உள்ள ஆண்கள் அனைவரும் தலைமறைவாகினர். இதனிடையே மூதாட்டி ஒருவர் உயிரிழந்த நிலையில் அவரின் உடலை சுமந்து செல்ல ஆண்கள் இல்லாததால் பெண்களே சடலத்தை எடுத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்