கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான 57 இடங்களில் ரெய்டு

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான 57 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
x
முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனைசெய்து வருகின்றனர். 

அதிமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் கே.பி.அன்பழகன். இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கே.பி.அன்பழகன் மட்டுமல்லாது குடும்பத்தினர் என 5 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், கே.பி.அன்பழகனின் உறவினர்கள், நண்பர்களின் இடங்கள் என 57 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. 
Next Story

மேலும் செய்திகள்