ஜன.24 ஆம் தேதி முதுநிலை மருத்துவ படிப்பு கலந்தாய்வு? - இன்று மாலை தரவரிசை பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் வருகிற 24ம் தேதி முதுநிலை மருத்துவ படிப்பு இடங்களுக்கான கலந்தாய்வு நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
x
தமிழகத்தில் வருகிற 24ம் தேதி முதுநிலை மருத்துவ படிப்பு இடங்களுக்கான கலந்தாய்வு நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 2 ஆயிரத்து 541 முதுநிலை மருத்துவ இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு விண்ணப்பித்து இருப்பவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அகில இந்திய கோட்டா வுக்கான முதல்கட்ட கலந்தாய்வு வருகிற 23ஆம் தேதி முடிவடையவுள்ள நிலையில், அடுத்த நாள் முதல் மாநில கோட்டாவுக்கான கலந்தாய்வு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்