பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்ற பழனி தைப்பூச தேரோட்டம்

பழனியில் தைப்பூச தேரோட்டம் பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்றது.
பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்ற பழனி தைப்பூச தேரோட்டம்
x
பழனியில் தைப்பூச தேரோட்டம் பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்றது. முருகனின் 3ஆம் படை வீடான பழனியில் தைப்பூச திருவிழா, கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏற்கனவே 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், தைப்பூச தேரோட்டமும் பக்தர்கள் இன்றியே நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது. இதன்படி, பழனி கோயில் வளாகத்திலேயே, தைப்பூச தேரோட்டம் பக்தர்கள் இன்றி, மிகவும் எளிமையாக நடைபெற்றது. முதல் தேரில் வீரபாகு மற்றும் விநாயக பெருமான் எழுந்தருளினார். தொடர்ந்து, 2வது தேரில் வள்ளி - தெய்வானையுடன், முத்துக்குமாரசுவாமி எழுந்தருளி கோயிலை வலம் வந்தார். இந்த நிகழ்வில் கோயில் ஊழியர்கள் மட்டும் பங்கேற்றனர். இதனிடையே கோயிலுக்கு வெளியே திரண்ட பக்தர்கள், காவடி ஆட்டம் ஆடி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். 


Next Story

மேலும் செய்திகள்