கொரோனா 3வது அலை - விமான நிலைய ஊழியர்களுக்கு புதிய உத்தரவு

கொரோனாவின் 3வது அலை எதிரொலி சென்னை விமான நிலையத்தில் 50 சதவீத ஊழியர்கள் சுழற்சி முறையில் பணிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.
x
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிர்வாகம், எலக்ட்ரிக்கல், தொழில்நுட்பம், தீயணைப்பு, ஹவுஸ் கீப்பிங் உள்ளிட்ட பிரிவுகளில் சுமார் 1500க்கும் மேற்பட்ட விமான நிலைய ஆனையக ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். 

இந்நிலையில், கொரோனாவின் 3வது அலை வேகமாக பரவி வருவதால் விமான நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள், பாதுகாப்பு படை போலீசார் என 70க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு சுழற்சி முறையில் 50 சதவீதத்தினர் பணிக்கு வர வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.  மறு உத்தரவு வரும் வரை இந்த கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்