151 ஆண்டுகளில் முதல் முறையாக பக்தர்களே இல்லாமல் ஜோதி தரிசன விழா ! | #ThanthiTv

வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 151வது தைப்பூச ஜோதி தரிசன விழா.
x
வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 151வது தைப்பூச ஜோதி தரிசன விழா. 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. ஏழு திரைகள் நீக்கி 6 காலங்கள் ஜோதி தரிசனம் நடைபெறும். இன்று காலை 6 மணி முதல் நாளை காலை 5:30 வரை ஆறு முறை ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும். காலை 6 மணி, 10மணி, பகல் 1:00, இரவு 7 மணி, 10:00 மணி நாளை காலை 5:30 மணி க்கு தரிசனம். கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் வருகை தடை செய்யப்பட்டுள்ளது. 151 ஆண்டுகளில் முதல் முறையாக பக்தர்களே இல்லாமல் இந்த ஆண்டு ஜோதி தரிசன விழா நடைபெறுகிறது. பக்தர்கள் வருகையை கட்டுப்படுத்தும் விதமாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் ஜோதி தரிசனத்தை வீட்டிலிருந்தே கண்டுகளிக்க யூ டியூப் வழியாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்