திணற வைத்த காளைகள்... திமிறி எழும் காளையர்கள்.. - சூரியூர் ஜல்லிக்கட்டு

திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டுப் போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது.
x
திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டுப் போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது. 
திருவெறும்பூர் அருகே சூரியூர் நற்கூடல் கருப்பண்ண சாமி கோயிலில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாகத் துவங்கியது. முதலில் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்ட நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஜல்லிக்கட்டை கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் 400 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் சுழற்சி முறையில் களமிறங்கினர்.  களத்தில் சீறிப் பாய்ந்த காளைகள், எதிர்த்து நின்ற வீரர்களை சுழற்றி வீசி எறிந்தன. துள்ளி பாய்ந்த மாடுகளுடன் வீரர்கள் கடுமையாக மல்லுக்கட்டி போராடினர். இதில் வெற்றி பெற்ற காளைகளுக்கும், வீரர்களுக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.  

Next Story

மேலும் செய்திகள்