கையில் சூடம் ஏற்றிய ரஜினி ரசிகை ! கையசைத்து வாழ்த்து தெரிவித்த ரஜினி ..! | #ThanthiTv

பொங்கலை முன்னிட்டு தனது வீட்டு முன்பு திரண்டிருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
x
பொங்கலை முன்னிட்டு தனது வீட்டு முன்பு திரண்டிருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். போயஸ் கார்டனில் அமைந்துள்ள ரஜினி காந்தின் வீட்டின் முன்பு, பொங்கல் வாழ்த்து பெறுவதற்காக ஏராளமான ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில், இல்லத்தின் வாயிலில் நின்று நடிகர் ரஜினி தனது ரசிகர்களுக்கு கையசைத்து பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இதனிடையே, ஆரோக்கியத்தை மிஞ்சியது எதுவும் இல்லை என்றும், கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்குமாறும் தனது வாழ்த்துச் செய்தியில் நடிகர் ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்