கோவில் திருவிழாக்களில் எருதாட்டம் - நீதிமன்றம் அதிரடி

கோயில் திருவிழாவின் ஒரு பகுதியாக எருது ஆட்டம் நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்க கோரிய விண்ணப்பத்தை பரிசீலிக்க வேண்டுமென சேலம் அன்னதானப்பட்டி போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள மாரியம்மன் கோயிலில் பொங்கல் பண்டிகையை ஒட்டி ஒவ்வொரு ஆண்டும் எருது ஆட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தாண்டுக்கான விழாவில் எருதாட்ட நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என போலீசார் எச்சரிப்பதால் நிகழ்ச்சிக்கு அனுமதி வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனு மீதான விசாரணையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் கலாச்சார நிகழ்ச்சிகளால் எந்த புகாரோ, சம்பவங்களோ நடைபெறவில்லை என கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் அளிக்கும் விண்ணப்பத்தை சட்டத்திற்குட்பட்டு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டுமென உத்தரவிட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்