பொங்கல் திருவிழா - மக்கள் கூடி, மகிழ்ச்சி கூவி ஆனந்த வழிபாடு

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை உலகெங்கும் பரவியுள்ள தமிழர்களால் வெகு விமரிசையாக இன்று கொண்டாடப்படுகிறது.
x
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை உலகெங்கும் பரவியுள்ள தமிழர்களால் வெகு விமரிசையாக இன்று கொண்டாடப்படுகிறது. பழந்தமிழர்களின் பெரும் பண்டிகைகளில் ஒன்றான அறுவடைத் திருநாளை பொங்கல் வைத்து இயற்கைக்கும், நல் அறுவடை தந்த சூரிய பகவானுக்கும்  நன்றி தெரிவிக்கும் விதமாக மக்கள் கொண்டாடுகின்றனர்.  வீடுகளை சுத்தப்படுத்தியும், வர்ணங்கள் பூசியும், மாவிலை தோரணங்கள் கட்டியும், புத்தாடை உடுத்தியும் அறுவடைத் திருநாள், பொங்கலை கொண்டாட மக்கள் தயாராகி உள்ளனர். அதேநேரம் வட இந்திய மக்களும் அறுவடைத் திருநாளை மகர சங்கராந்தி என்னும் பெயரில் திருவிழாவாக கொண்டாடுகின்றனர். தமிழகத்தில் மூன்று நாட்கள் கொண்டாடப்படும் இந்த அறுவடைத் திருநாளில் முதல்  நாளில் பொங்கல் வைத்து சூரிய கடவுளுக்கும், முன்னோர்களுக்கும் படைத்து மக்கள் கூடி, மகிழ்ச்சி கூவி வழிபடுவர். இரண்டாம் நாள் கால்நடைகளுக்கு பொங்கலிட்டு  அதனை வழிபடுவார்கள். மூன்றாவது நாளான காணும் பொங்கலன்று சொந்த பந்தங்களை சந்தித்து அன்பு பரிமாற்றம் மேற்கொள்வர். இப்படியாக தமிழகத்தில் பொங்கல் விழாவன்று, விவசாய மரபையும், தமிழர் மாண்பையும், உறவையும் பேணும் திருநாளாக தமிழர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்