தை பிறந்தும் வழி பிறக்காதா... ஏக்கத்தில் மண்பாண்ட தொழிலாளர்கள்

தை பிறந்தும் வழி பிறக்காதா என ஏக்கத்தில் தவித்து வரும் மண்பாண்ட தொழிலாளர்களின் துயர கதையை விவரிக்கிறது.
x
தை பிறந்தும் வழி பிறக்காதா என ஏக்கத்தில் தவித்து வரும் மண்பாண்ட தொழிலாளர்களின் துயர கதையை விவரிக்கிறது.

உச்சம் பெற்ற கொரோனா இரண்டாவது அலையில் இருந்து படிப்படியாக மீண்டு இயல்பு நிலைக்கு தமிழகம் திரும்பிய நிலையில், ஓட்டுமொத்த அடிதட்டு மக்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

அன்றாடம் உழைத்தால் தான் அடுத்த வேளை உணவு என்ற நிலையில், அவர்களை உழைக்க விடாமல் மீண்டும் முடக்கியது இந்த கொரோனா... ஆனால் தை பிறந்தால் வழி பிறந்துவிடும் என்ற நம்பிக்கையில், மீண்டும் தொழிலை தொடங்கிய சிறு, குறு தொழிலாளர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது, இந்த ஒமிக்ரான். 

பொங்கல் பண்டிகையை கொண்டாட தேவையான மண்பாண்டங்கள் முதல், கரும்பு, மஞ்சள், பூ விற்பனை அனைத்தும் இந்த ஆண்டும் சரிவை சந்தித்துள்ளது. பல வண்ணம் தீட்டப்பட்ட மண்பாண்டங்களோ தங்களை வாங்க ஆளின்றி ஓரமாக கிடக்கின்றன.

வந்தாரை வாழவைக்கும் என்ற நம்பிக்கையில் சென்னைக்கு படையெடுத்த வெளி மாவட்ட மண்பாண்ட விற்பனையாளர்களும் ஊரடங்கால் போதிய வியாபாரமின்றி முழிபிதுங்கி செய்வதறியாது நிற்கின்றனர். 

நாளை பிறக்கும் தை, தங்களுக்கு நல்லதொரு வழியை காட்டாதா என்று வழி மேல் விழி வைத்து இவர்களை போல் காத்திருக்கும் அடிதட்டு மக்கள் இங்கு ஏராளம். 


Next Story

மேலும் செய்திகள்