சென்னையில் சாலை பணி - முதல்வர் திடீர் விசிட்!

சேதமடைந்த சாலைகளுக்கு பதிலாக புதிய சாலைகள் அமைக்கும் பணியினை, முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து, உரிய காலத்திற்குள் பணிகளை முடிக்க அறிவுறுத்தியுள்ளார்.
x
சேதமடைந்த சாலைகளுக்கு பதிலாக புதிய சாலைகள் அமைக்கும் பணியினை, முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து, உரிய காலத்திற்குள் பணிகளை முடிக்க அறிவுறுத்தியுள்ளார்.

மழையின் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் சாலைகள் சேதமடைந்தன. இதனை சீர் செய்ய தமிழக அரசு சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சேதமடைந்த சாலைகளை சீரமைக்க 213 கோடி ரூபாய் சென்னை மாநாகராட்சி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தநிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் மைலாப்பூர், தேனாம்பேட்டை, கோடாம்பாக்கம், ஆகிய இடங்களில் சாலை அமைக்கும் பணிகளை இரவு நேரத்தில் ஆய்வு செய்தார். அப்போது சாலை பணிகளை துரிதமாகவும், தரமாகவும் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வின்போது சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்