தேசிய நெடுஞ்சாலையில் டீசல் திருட்டு - பாதி விலையில் விற்பனையாகும் கலப்பட டீசல்

தர்மபுரி மாவட்ட தேசிய நெடுஞ்சாலையில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் டீசல் திருட்டும், கலப்பட டீசல் விற்பனையும் நடைபெறுவதை தடுக்க வேண்டும் என லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
x
தர்மபுரி மாவட்ட தேசிய நெடுஞ்சாலையில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் டீசல் திருட்டும், கலப்பட டீசல் விற்பனையும் நடைபெறுவதை தடுக்க வேண்டும் என லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் பெங்களூருவை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் தினசரி ஆயிரக்கணக்கான லாரிகள் கடந்து செல்கின்றன, ஒருசில லாரிகளின் ஓட்டுநர்கள், லாரியில் உள்ள டீசலை உரிமையாளருக்கு தெரியாமல் கலப்பட டீசல் விற்கும் கும்பலிடம் பாதி விலைக்கு விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. பாதி விலைக்கு விற்கப்படும் டீசலை கலப்படம் செய்து மர்ம கும்பல் விற்பனை செய்து வருவதாகவும் லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். லாரியில் இருந்து டீசல் எடுப்பதற்காக மறைவான குடிசை பகுதி அமைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளவர்கள், லாரியில் இருந்து டீசல் திருட்டை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்