சோப் மற்றும் டிடர்ஜென்ட் 3-20% விலை உயர்வு - அதிர்ச்சியில் மக்கள்

சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் மீதான விலையை, இம்மாதத்தில் மட்டும் ஹிந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனம், 3 முதல் 20 சதவீதம் வரை உயர்த்தி உள்ளதாக, வணிக தரவுகள் தெரிவித்து உள்ளன.
x
சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் மீதான விலையை, இம்மாதத்தில் மட்டும் ஹிந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனம், 3 முதல் 20 சதவீதம் வரை உயர்த்தி உள்ளதாக, வணிக தரவுகள் தெரிவித்து உள்ளன. மூலப்பொருட்கள் விலை உயர்வு எதிரொலியாக, நுகர்வோர் பொருட்கள் மீதான விலை அதிகரித்து வருவதாக, சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  மேலும், கோதுமை மாவின் விலையை 5 முதல் 8 சதவீதமும், பாஸ்மதி அரிசியின் விலையை 8 முதல் 10 சதவீதமும் உயர்த்த உள்ளதாக, அதானி வில்மர் நிறுவனம் தெரிவித்து உள்ளது.  அதேபோல, பிஸ்கட் தயாரிப்பு நிறுவனமான பார்லே, வரும் காலாண்டில் இருந்து, தயாரிப்புகளின் விலையை 4 முதல் 5 சதவீதம் அதிகரிக்க திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளது.  இந்நிலையில், தொடர்ந்து அதிகரிக்கும் சில்லரை பணவீக்கம், பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்