கோவையில் எய்ம்ஸ் - முதலமைச்சர் ஸ்டாலின் மனு

நீட் விலக்கு உள்ளிட்ட 11 கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் அளித்துள்ளார்.
x
நீட் விலக்கு உள்ளிட்ட 11 கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம்  அளித்துள்ளார்.

தமிழத்தில் 11 மருத்துவ கல்லூரி துவக்கப்பட்ட நிகழ்ச்சியில் மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கலந்துகொண்டார். அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் 11 கோரிக்கைகளை அடங்கிய மனுவை அளித்துள்ளார்.

அதில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகளை விரைந்து துவங்க வேண்டும் என்றும், கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

2ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக 6 மருத்துவ கல்லூரிகள் துவக்க வேண்டும்  என கேட்டுக்கொண்டுள்ளார்.

தேசிய சுகாதார திட்ட பணிகள் துறைக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும் எனவும், 19 மாவட்டங்களில் தலைமை மருத்துவமனை அமைக்க ஒப்புதல் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மாநில அரசு நிதி உதவியில் செயல்படும் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்

வெளி நாடுகளில் படித்தவர்களின் இன்டர்சிப் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் எனவும் வரைவு முதுகலை மருத்துவ கல்வி விதிகள் தொடர்பாக பொதுக்கள் கருத்து தெரிவிக்க அவகாசம் அளிக்க வேண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை மனுவில் வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்