ஒரே நேரத்தில் 11 மருத்துவ கல்லூரி - பிரதமர் பெருமிதம்

கடந்த 7 ஆண்டுகளில் முதுநிலை, இளநிலை மருத்துவ படிப்புகள் 80 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
x
கடந்த 7 ஆண்டுகளில் முதுநிலை, இளநிலை மருத்துவ படிப்புகள் 80 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து பேசிய  பிரதமர் மோடி, ஒரே நேரத்தில் 11 மருத்துவக்கல்லூரிகள் துவக்கி வைக்கப்படுவது இதுவே முதன் முறை என குறிப்பிட்ட அவர், தனது முந்தைய சாதனையை தானே முறியடித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

 நாடு முழுவதும் ஒட்டு மொத்தமாக 387 மருத்துவ கல்லூரிகள் மட்டுமே இருந்த நிலையில் கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் 596 மருத்துவக் கல்லூரிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

கடந்த 7 ஆண்டுகளில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்பு இடங்கள் 1 லட்சத்து 48 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நாட்டில் மருத்துவ தேவைக்காக எய்ம்ஸ் மருத்துவமனைகள் 22 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மருத்துவ சுற்றுலா மையமான இந்தியாவில் தேவையான அனைத்து வசதிகளும்  உள்ளதாக தெரிவித்தார்.

மக்கள் மருந்தகம், மருத்துவத் துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்த பிரதமர், இதன் மூலம் ஏழைகளின் மருத்துவ செலவுக்கான கோடிக்கணக்கான பணம் சேமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்