தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் திறப்பு விழா - பிரதமர் மோடி உரை (தமிழில்)
பதிவு : ஜனவரி 12, 2022, 07:11 PM
தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகள் மற்றும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை துவக்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, வணக்கம் என தமிழில் கூறி பொங்கல் மற்றும் மகரசங்கராந்தி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகள் மற்றும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை துவக்கி வைத்து பேசிய பிரதமர் மோடி,  வணக்கம் என தமிழில் கூறி பொங்கல் மற்றும் மகரசங்கராந்தி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்து  பேசிய அவர், 2014 ம் ஆண்டு வரை நாடு முழுவதும் ஒட்டு மொத்தமாக 387 மருத்துவ கல்லூரிகள் மட்டுமே இருந்த நிலையில், கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் அது 596 மருத்துவக் கல்லூரிகளாக அதிகரித்துள்ளது என குறிப்பிட்ட அவர் இது கிட்டதட்ட 54% அதிகம் என குறிப்பிட்டார்.நாடு முழுவதும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் தற்போது 22 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று கூறிய அவர், ஒரே நேரத்தில் 11 மருத்துவக்கல்லூரிகள் துவக்கி வைக்கப் படுவது இதுவே முதன் முறை என்றும் குறிப்பிட்டார்.அண்மையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரே நேரத்தில் 9 மருத்துவக் கல்லூரிகளை துவக்கி வைத்ததாக கூறிய அவர்,  தனது முந்தைய சாதனையை தானே முறியடித்து உள்ளதாகவும் குறிப்பிட்டார்.தொடர்ந்து பேசிய அவர், 
தமிழ் மொழியின் வளமை மற்றும் கலாச்சாரத்தால்  எப்போதும் கவரப்பட்டு இருப்பதாக குறிப்பிட்ட பிரதமர்,  ஐக்கிய நாடுகள் சபையில் உலகின் மிகப் பழமையான மொழியான தமிழ் மொழியில் ஒரு சில வார்த்தைகளை பேச வாய்ப்புக் கிடைத்தது, தனது வாழ்க்கையின் மிக மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்று என குறிப்பிட்டார்.புதிய தேசிய கல்வி கொள்கையில் அனைத்து இந்திய மொழிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும், பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளையும் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் வழங்குவதற்கான வாய்ப்பு வழங்கப் பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

82 views

மீண்டும் மோதும் CSK Vs SRH பழி தீர்க்குமா சென்னை அணி..!

புனேவில் நடைபெறும் 46வது லீக் போட்டியில் சென்னையுடன் ஹைதராபாத் அணி மோதுகிறது.

75 views

'தளபதி 66' அப்டேட் !

'தளபதி 66' அப்டேட் !

61 views

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

36 views

பிற செய்திகள்

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (16-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (16-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

1 views

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (16-05-2022) | Night Headlines | Thanthi TV

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (16-05-2022) | Night Headlines | Thanthi TV

17 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (16-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (16-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

47 views

கால் கடுக்க நின்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் - வரலாற்றில் இடம் பிடித்த நிகழ்வு

சென்னை பல்கலைக்கழக வரலாற்றில் முதல் முறையாக 931 பேருக்கும் கால் கடுக்க நின்றுகொண்டே தமிழக ஆளுநரும், முதல்வரும் பட்டங்களை வழங்கியுள்ளனர்...

20 views

தமிழில் வாழ்த்து...தமிழர்களுக்கு பாராட்டு...முதல்வர் மு.க.ஸ்டாலின் முன் நெகிழ்ந்த ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் வர வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

29 views

#Breaking || 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

அடுத்த 3 நாட்களுக்கு, 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

27 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.