தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் திறப்பு விழா - பிரதமர் மோடி உரை (தமிழில்)

தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகள் மற்றும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை துவக்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, வணக்கம் என தமிழில் கூறி பொங்கல் மற்றும் மகரசங்கராந்தி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
x
தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகள் மற்றும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை துவக்கி வைத்து பேசிய பிரதமர் மோடி,  வணக்கம் என தமிழில் கூறி பொங்கல் மற்றும் மகரசங்கராந்தி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்து  பேசிய அவர், 2014 ம் ஆண்டு வரை நாடு முழுவதும் ஒட்டு மொத்தமாக 387 மருத்துவ கல்லூரிகள் மட்டுமே இருந்த நிலையில், கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் அது 596 மருத்துவக் கல்லூரிகளாக அதிகரித்துள்ளது என குறிப்பிட்ட அவர் இது கிட்டதட்ட 54% அதிகம் என குறிப்பிட்டார்.நாடு முழுவதும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் தற்போது 22 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று கூறிய அவர், ஒரே நேரத்தில் 11 மருத்துவக்கல்லூரிகள் துவக்கி வைக்கப் படுவது இதுவே முதன் முறை என்றும் குறிப்பிட்டார்.அண்மையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரே நேரத்தில் 9 மருத்துவக் கல்லூரிகளை துவக்கி வைத்ததாக கூறிய அவர்,  தனது முந்தைய சாதனையை தானே முறியடித்து உள்ளதாகவும் குறிப்பிட்டார்.தொடர்ந்து பேசிய அவர், 
தமிழ் மொழியின் வளமை மற்றும் கலாச்சாரத்தால்  எப்போதும் கவரப்பட்டு இருப்பதாக குறிப்பிட்ட பிரதமர்,  ஐக்கிய நாடுகள் சபையில் உலகின் மிகப் பழமையான மொழியான தமிழ் மொழியில் ஒரு சில வார்த்தைகளை பேச வாய்ப்புக் கிடைத்தது, தனது வாழ்க்கையின் மிக மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்று என குறிப்பிட்டார்.புதிய தேசிய கல்வி கொள்கையில் அனைத்து இந்திய மொழிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும், பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளையும் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் வழங்குவதற்கான வாய்ப்பு வழங்கப் பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.






Next Story

மேலும் செய்திகள்