சசிகலா மீது அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட புகார்..எழுத்து பூர்வமாக விளக்கம் அளிக்க வலியுறுத்தல்
பதிவு : ஜனவரி 12, 2022, 05:28 PM
சசிகலா மீது அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து எழுத்து பூர்வமாக விளக்கம் அளிக்க மாம்பலம் காவல் ஆய்வாளருக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது
அதிமுகவின் பொதுச் செயலாளர் என தொடர்ந்து சசிகலா தன்னை பிரகடனப்படுத்தி வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க மாம்பலம் காவல் நிலைய போலீசாருக்கு அறிவுறுத்துமாறு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதில், பொது செயலாளர் பதவி நீக்கப்பட்டு, அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஒ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டதை தேர்தல் ஆணையம் ஏற்று கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. கட்சிக்கு உரிமை கோரிய சசிகலாவின் மனுவை தேர்தல் ஆணையம் மற்றும் உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ள நிலையில்,  நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் அளித்த தீர்ப்பை சசிகலா மதிக்காமல் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை  17 வது நீதித்துறை நடுவர் கிருஷ்ணன், அதிமுக சார்பில் மாம்பலம் காவல் நிலைத்தில் அளிக்கப்பட்ட புகாரில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என கேள்வி எழுப்பினார். மேலும் அது குறித்து வரும் 20 ஆம் தேதி எழுத்துப்பூர்வமாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மாம்பலம் காவல் ஆய்வாளருக்கு  உத்தரவிட்டு  விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.

பிற செய்திகள்

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (19-05-2022) | Night Headlines | Thanthi TV

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (19-05-2022) | Night Headlines | Thanthi TV

8 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (19-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (19-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

23 views

#BREAKING || சிதம்பரம் நடராஜர் கோயிலில் போலீஸ் குவிப்பு

சிதம்பரம் நடராஜர் கோயிலில் போலீஸ் குவிப்பு...

18 views

#BREAKING || தமிழகத்தில்10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில்10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை...

145 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (19.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (19.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

42 views

#BREAKING || கருணாநிதி சிலை அமைக்க தடை

கருணாநிதி சிலை அமைக்க தடை...

193 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.