மக்கள் உதவியுடன் நள்ளிரவில் திருட்டு - ருசிகர சிசிடிவி காட்சி வெளியீடு
பதிவு : ஜனவரி 12, 2022, 04:30 PM
சென்னை காசி தியேட்டர் அருகே டீக்கடையில், பொதுமக்கள் துணையுடன் திருடிய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை காசி தியேட்டர் அருகே டீக்கடையில், பொதுமக்கள் துணையுடன் திருடிய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். 

சென்னை காசி தியேட்டர் அருகே அப்துல் ரசீக் என்பவர் தேநீர் நிலையம் நடத்தி வருகிறார். கடையை பூட்டிச் சென்ற நிலையில், அந்தக் கடையை இளைஞர் ஒருவர் திறந்துள்ளார். அப்போது, யார் என விசாரித்த ஏ.டி.எம். காவலாளியிடம், கடை ஊழியர் என கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து, கடையை திறக்க அவர் உதவியுள்ளார். அதைத் தொடர்ந்து பணம் மற்றும் சிகரெட்களை கொள்ளையடித்த இளைஞர், மீண்டும் கடையை பூட்ட முடியாமல் திணறியுள்ளார். அப்போது, தான் கடையின் ஊழியர் என்று கூறி பொதுமக்கள் உதவியுடன் கடையை பொறுப்புடன் சாத்திச் சென்றுள்ளார். இதனிடையே, காலையில் கொள்ளை நடந்தது தெரியவந்தது. கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில், மக்களை பயன்படுத்தி, அசால்டாக கைவரிசை காட்டிய நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.