வழி தவறி வந்த சிறுத்தை குட்டி..சிறுத்தை குட்டியை கண்டு மக்கள் அச்சம்

சத்தியமங்கலம் அடுத்துள்ள பங்களாதொட்டி கிராமத்தில், வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த சிறுத்தை குட்டி ஊருக்குள் புகுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
x
சத்தியமங்கலம் அடுத்துள்ள பங்களாதொட்டி கிராமத்தில், வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த சிறுத்தை குட்டி ஊருக்குள் புகுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. அப்பகுதியிலுள்ள ஒரு கட்டிடத்தில் சிறுத்தை குட்டி ஒன்று படுத்திருப்பதை கிராம மக்கள் கண்டு அச்சம் அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக ஆசனூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர்  லாவகமாக பிடித்தனர். சிறுத்தை குட்டியை தாய் சிறுத்தையுடன் சேர்ப்பது குறித்து முயற்சிப்பதாகவும் வனத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்