தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா சென்னையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு
பதிவு : ஜனவரி 12, 2022, 03:59 PM
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அரசு சார்பில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மாநிலத்தில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக மன்சுக் மாண்டவியா சென்னையில் இன்று ஆய்வு நடத்தினார். முன்னதாக இன்று காலை சென்னை வந்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் செயல்பட்டு வரும் அவசர 108 கட்டுப்பாட்டு அறை, கோவிட் கட்டுப்பாட்டு அறை மற்றும் ஆக்சிஜன் சேமிப்பு கிடங்கு ஆகியவற்றை நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயண பாபு, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை இயக்குனர் தேரணி ராஜன் மற்றும் சுகாதார துறை உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர். அதனைத் தொடர்ந்து சேப்பாக்கத்தில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனையின் அம்மா முழு உடல் பரிசோதனை மையம் மற்றும் புற்றுநோய் சிகிச்சைக்கான மையம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து, இன்று பிற்பகல் மருத்துவ வல்லுனர்கள் குழு, ஐ.சி.எம்.ஆர் மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் மத்திய அமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

78 views

மீண்டும் மோதும் CSK Vs SRH பழி தீர்க்குமா சென்னை அணி..!

புனேவில் நடைபெறும் 46வது லீக் போட்டியில் சென்னையுடன் ஹைதராபாத் அணி மோதுகிறது.

74 views

'தளபதி 66' அப்டேட் !

'தளபதி 66' அப்டேட் !

60 views

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

34 views

பிற செய்திகள்

ரஷ்யாவுக்கு உக்ரைன் வைத்த ட்விஸ்ட்... போரில் மிகப்பெரிய திருப்புமுனை

ரஷ்ய படைகளை உள்ளே வர விடாமல் தடுக்க உக்ரைனிய படைகள் செய்த இந்த காரியம் தான், மிகப்பெரும் திருப்பு முனையாக அமைந்துள்ளது...

98 views

#BREAKING || மீண்டும் உயிர் பெறும் துறைமுகம் - மதுரவாயல் உயர்மட்ட சாலை

மதுரவாயல் - சென்னை துறைமுகம் உயர்மட்ட சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

44 views

சென்னை வரும் பிரதமர் மோடி - முக்கிய ஆலோசனை

பிரதமர் மோடி சென்னை வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தினார்....

37 views

இத்தாலி சைக்கிள் பந்தய தொடர் - 9ம் சுற்றில் ஆஸி. வீரர் ஹின்ட்லே வெற்றி..!

இத்தாலியின் இசெர்னியா நகரில் இருந்து, ப்ளாக்ஹாஸ் நகர் வரை 187 கிலோ மீட்டர் தூரத்துக்கு சைக்கிள் பந்தயம் நடைபெற்றது...

9 views

வீடுகள் கட்டாமலேயே கட்டியதாக கணக்கு காட்டி முறைகேடு - மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2016 முதல் 20 ஆம் ஆண்டு வரை பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் 435 வீடுகள் கட்டாமலேயே...

34 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (16.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (16.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

29 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.