தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா சென்னையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அரசு சார்பில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆய்வு செய்தார்.
x
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மாநிலத்தில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக மன்சுக் மாண்டவியா சென்னையில் இன்று ஆய்வு நடத்தினார். முன்னதாக இன்று காலை சென்னை வந்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் செயல்பட்டு வரும் அவசர 108 கட்டுப்பாட்டு அறை, கோவிட் கட்டுப்பாட்டு அறை மற்றும் ஆக்சிஜன் சேமிப்பு கிடங்கு ஆகியவற்றை நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயண பாபு, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை இயக்குனர் தேரணி ராஜன் மற்றும் சுகாதார துறை உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர். அதனைத் தொடர்ந்து சேப்பாக்கத்தில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனையின் அம்மா முழு உடல் பரிசோதனை மையம் மற்றும் புற்றுநோய் சிகிச்சைக்கான மையம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து, இன்று பிற்பகல் மருத்துவ வல்லுனர்கள் குழு, ஐ.சி.எம்.ஆர் மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் மத்திய அமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்