உள்ளாடைக்குள் மறைத்து 1.3 கிலோ தங்கம் கடத்தல்.. சந்தேகத்தில் சிக்கிய 2 பேர்

இலங்கையில் இருந்து சென்னைக்கு கடத்தப்பட்ட ரூபாய் 60 லட்சத்து 71 ஆயிரம் மதிப்பிலான தங்கம் விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
x
உள்ளாடைக்குள் மறைத்து 1.3 கிலோ தங்கம் கடத்தல்.. சந்தேகத்தில் சிக்கிய 2 பேர் 

இலங்கையில் இருந்து சென்னைக்கு கடத்தப்பட்ட ரூபாய் 60 லட்சத்து 71 ஆயிரம் மதிப்பிலான தங்கம் விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொழும்புவில் இருந்து சென்னைக்கு சந்தேகத்திற்கிடமான முறையில் விமானத்தில் வந்த 2 பயணிகளிடம் சுங்க அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் இருவரும் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து ரூபாய் 60 லட்சத்து 71 ஆயிரம் மதிப்பிலான 1 கிலோ 397 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்