"ஊரடங்கால் புடவைகள் வாங்க வியாபாரிகள் தயக்கம்" - நெசவாளர்கள் கவலை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் ஊரடங்கு காரணமாக கைத்தறி நெசவு பட்டுப்புடவைகளை வாங்க வியாபாரிகள் தயக்கம் காட்டுவது நெசவாளர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.
x
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் ஊரடங்கு காரணமாக கைத்தறி நெசவு பட்டுப்புடவைகளை வாங்க வியாபாரிகள் தயக்கம் காட்டுவது நெசவாளர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. ஆரணியை சுற்றி உள்ள சேவூர், முள்ளிபட்டு, மூனுகபட்டு, மருசூர் உள்ளிட்ட பகுதிகளில் கைத்தறி பட்டுப்புடவைகள் நெய்வது பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இத்தொழிலை நம்பி, சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கு உள்ளனர். இந்நிலையில், வழக்கமாக பொங்கல் பண்டிகையொட்டி அதிகளவில் பட்டுப்புடவைகள் விற்பனை செய்யப்படும் நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக தற்போது பட்டுப்புடவைகளை வாங்க மொத்த வியாபாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் பொங்கல் பண்டிகையையொட்டி தயார் செய்யப்பட்ட பட்டுப்புடவைகள் அதிகளவில் தேங்கும் சூழல் உருவாகி உள்ளது அப்பகுதி நெசவாளர்கள் இடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்