"தமிழ்நாட்டில் புதிய 11 மருத்துவக் கல்லூரிகள்" :"திமுக அரசு கொண்டு வந்ததாக காட்ட முயற்சி" - எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தமிழ்நாட்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ள நிலையில், அத​னை தாம் கொண்டு வந்ததாக திமுக அரசு காட்ட முயற்சிப்பதாக கூறி முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் புதிய 11 மருத்துவக் கல்லூரிகள் :திமுக அரசு கொண்டு வந்ததாக காட்ட முயற்சி - எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்
x
தமிழ்நாட்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ள நிலையில், அத​னை தாம் கொண்டு வந்ததாக திமுக அரசு காட்ட முயற்சிப்பதாக கூறி முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், சந்தர்ப்ப வசத்தால் திமுக அரசு ஆட்சி அமைத்துள்ளதாகவும், பொய், பித்தலாட்டங்களில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளதாக புகார் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் புதிய 11 மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசிடம் அனுமதி பெற்று கட்டடம் கட்டுவதற்கான நிதியை ஒதுக்கியதாக குறிப்பிட்டுள்ளார். விருதுநகர், நாமக்கல் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் பூமி பூஜையிலும் பங்கேற்றதாக கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி, பிரதமர் அதனை திறந்து வைக்க உள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் இந்த 11 மருத்துவக்கல்லூரிகளை தாம் கொண்டு வந்ததாக திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்ட நினைப்பதாகவும், இதனை அதிமுக சார்பில் கடுமையாக கண்டிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அடுத்தவர்கள் பெற்ற குழந்தைக்கு சொந்தம் கொண்டாடாமல், தாங்கள் தான் செய்தோம் என்று விளம்பர மோகத்தில் இருந்து விடுபட்டு  தமிழக மக்களுக்கு சொந்த செயல் திட்டங்களை வகுத்து நிறைவேற்றிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்