12 லட்சம் மக்களுக்கு ஒரு மாவட்டம் - அன்புமணி ராமதாஸ் முதல்வருக்கு கடிதம்

தமிழகத்தில் 12 லட்சம் மக்களுக்கு ஒரு மாவட்டம் என்ற கணக்கில் மாவட்டங்களை மறுசீரமைப்பு செய்யுமாறு முதல் அமைச்சர் ஸ்டாலினுக்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
12 லட்சம் மக்களுக்கு ஒரு மாவட்டம் - அன்புமணி ராமதாஸ் முதல்வருக்கு கடிதம்
x
தமிழகத்தில் 12 லட்சம் மக்களுக்கு ஒரு மாவட்டம் என்ற கணக்கில் மாவட்டங்களை மறுசீரமைப்பு செய்யுமாறு முதல் அமைச்சர் ஸ்டாலினுக்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த ஆட்சியில் உருவாக்கப்பட்ட புதிய மாவட்டங்களில் உள்ள சில சட்டப்பேரவை தொகுதிகளின் எல்லைகள் அண்டைய மாவட்டங்களில் பரந்து கிடக்கிறது எனக் கூறியுள்ளார்.

ஆலந்தூர் தொகுதி சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பரந்து கிடப்பது போன்று பல தொகுதிகள் இருப்பதாக கூறியிருக்கும் அன்புமணி ராமதாஸ், இதனால் தொகுதிக்கு வழங்கப்படும் நிதியை 2 ஆட்சியர்கள் வாயிலாக செலவழிப்பதில் சிக்கல்கள் உள்ளன என்றும் இதனால் மக்கள் நல பணிகள் பாதிக்கப்படுகின்றன என்றும் கூறியிருக்கிறார். 

காஞ்சிபுரம் - செங்கல்பட்டு மாவட்டம் உருவாக்கத்தில் அதிக வருவாய் வழங்கும் தொகுதிகள் செங்கல்பட்டு மாவட்டம் சென்றிருப்பது சம அளவு வளர்ச்சியை ஏற்படுத்தாது எனக் கூறியிருக்கும் அவர்,சிறப்பான நிர்வாகத்திற்கு தமிழகத்தில் 12 லட்சம் பேருக்கு ஒரு மாவட்டம் என்ற அளவில் அனைத்து மாவட்டங்களையும் மறுசீரமைக்க அரசு முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

அவ்வாறு மறுசீரமைக்கும் போது, சட்டப்பேரவை தொகுதிகளின் எல்லைகள் மாவட்ட எல்லைக்குள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் இதற்காக மாவட்ட மறுவரையறை ஆணையத்தை அரசு அமைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்