11 புதிய மருத்துவ கல்லூரிகள் - பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார்

தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளையும், செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்தையும் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்க உள்ளார்.
11 புதிய மருத்துவ கல்லூரிகள் - பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார்
x
தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளையும், செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்தையும் பிரதமர் நரேந்திர மோடி இன்று  மாலை 4 மணிக்குத் தொடங்கி வைக்கவுள்ளார். 

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் புதிய மருத்துவக் கல்லூரிகள் 4 ஆயிரம்  கோடி ரூபாய் மதிப்பீட்டு செலவில் கட்டப்பட்டுள்ளதாகவும், அதில் மத்திய அரசின் பங்களிப்பு 2 ஆயிரத்து 145 கோடி ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர், நாமக்கல், நீலகிரி, திருப்பூர்,  திருவள்ளூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், ராமநாதபுரம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள இந்த மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் ஆயிரத்து 450 இடங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் இந்தியப் பாரம்பரியம், செம்மொழிகள் ஆகியவற்றை மேம்படுத்தி பாதுகாக்கும் தொலைநோக்குத் திட்டத்தின்  அடிப்படையில் சென்னையில், செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனத்தின் புதிய வளாகம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசின் முழுமையான நிதியுதவியை கொண்ட புதிய வளாகம் 24 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செம்மொழித் தமிழை  மேம்படுத்தும்  இந்த நிறுவனம்  'திருக்குறளை' பல்வேறு  இந்திய மொழிகளிலும், 100 வெளிநாட்டு மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிடுவதையும்  நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின், மற்றும் அமைச்சர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி விழாவில் பங்கேற்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்