வீடு தேடி பணியாரம் முதல் மாத்திரை வரை - தமிழகத்தின் சிறிய நகரங்களை குறிவைக்கும் 'சாரோஸ்'

பெரும் நகரங்களில் உணவு போன்ற டெலிவரி சேவை என்பது சர்வ சாதாரணமாகிவிட்ட நிலையில், தமிழகத்தில் உள்ள சிறு நகரங்களை குறிவைத்து இயங்கி வரும் 'சாரோஸ்' என்ற டெலிவரி சேவை குறித்து பார்க்கலாம்.
x
பெரும் நகரங்களில் உணவு போன்ற டெலிவரி சேவை என்பது சர்வ சாதாரணமாகிவிட்ட நிலையில், தமிழகத்தில் உள்ள சிறு நகரங்களை குறிவைத்து இயங்கி வரும் 'சாரோஸ்' என்ற டெலிவரி சேவை குறித்து பார்க்கலாம். 
 
பொதுவாக வெளிநாடுகளில் வேலை செய்யும் பலரும் 
என்றாவது ஒரு நாள் நம் சொந்த நாட்டிற்கு திரும்பிவிடமாட்டோமா என்ற ஏக்கத்தில் பணியாற்றுவதுண்டு... அப்படி, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு, இந்தியா திரும்பிய நண்பர்கள் இருவர் ஒன்றிணைந்து தொடங்கியது தான், சாரோஸ் என்ற செயலி. 

கொரோனா ஊரடங்கில் பலரும் வேளையை இழந்து வந்த நிலையில், அதனை சாதகமாக பயன்படுத்தி வெற்றி கண்ட நண்பர்கள் , ராம் பிரசாத் மற்றும் ஜெயசிம்ஹன்.

கொரோனா போன்ற சவாலான காலக்கட்டத்தில் வீட்டில் இருந்தபடி, வீடு தேடி குறித்த நேரத்திற்குள் உணவு கிடைக்க செய்த இந்த உணவு டெலிவரி ஆப்கள்... நகரவாசிகளுக்கு கிடைத்த வரபிரசாதம்... 
ஆனால் இவற்றை சிதம்பரம் போன்ற சிறிய நகரில் தொடங்கினால் என்ன என்ற கேள்வியோடு, 2018ஆம் ஆண்டில் 30 லட்ச ரூபாய் முதலீட்டில் தொடங்கியது, சாரோஸ் என்ற உணவு டெலிவரி ஆப். 

ராம்பிரசாத், சாரோஸ் நிறுவனம் 
"சிறிய ஊர்களில் டெலிவரிக்கான தேவை அதிகம்"
"உணவு டெலிவரிக்காக செயலி அறிமுகம்"
"இன்று ஆல் இன் ஆல் டெலிவரி சேவை"

தற்போது சிதம்பரத்தை தலைமையிடமாக கொண்டு தமிழகத்தில் உள்ள 38 இடங்களில் செயல்பட்டு வரும் இந்த டெலிவரி ஆப் மூலம் பணியாரம் முதல் மாத்திரைகள் வரை மக்களின் வீடு தேடி செல்கின்றன... 

ராம்பிரசாத், சாரோஸ் நிறுவனம் 
"கொரோனா ஊரடங்கின் போது வரவேற்பு"
"மற்ற சிறிய ஊர்களில் டெலிவரி சேவை தொடக்கம்"
"தமிழகம் முழுவதும் 38 ஊர்களில் டெலிவரி சேவை"

இதுவரை 13 லட்சம் ஆடர்கள், இரண்டாயிரம் வணிகர்கள், 400 நிர்வாகிகள்... உடனுக்குடன் டெலிவரி செய்ய அதிகளவில் மின்சார வாகனங்கள் பயன்பாடு... என அசத்தும் சாரோஸ் நிறுவனத்தினர், 2023ஆம் ஆண்டுக்குள் 100 இடங்களில் தங்கள் கிளையை விரிவாக்கம் செய்ய உள்ளதாக கூறுகின்றனர். 

இதை தவிர்த்து அடுத்த கட்டமாக நகரங்களில் ஆப் மூலம் கிடைக்கும் வாடகை கார், ஆட்டோ வசதியை சிறு நகரங்களில் அறிமுகப்படுத்த வேண்டும் என்பதே தங்களது லட்சியம் என்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்