காளைகளுக்கு ஏசி கார், ஏசி அறை... ராஜாபோல் 'பேட்ட காளி'!

ஜல்லிக்கட்டு நெருங்கி வரும் வேளையில்,தமிழகத்தின் டாப் -10 காளைகளின் பராமரிப்பு முறை குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
x
ஜல்லிக்கட்டு நெருங்கி வரும் வேளையில்,தமிழகத்தின் டாப் -10 காளைகளின் பராமரிப்பு முறை குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.  

மிடுக்கான தோற்றம், கூர் தீட்டப்பட்ட கொம்புகள், நடையில் ராஜ கம்பீரம்... திமிறும் திமில் என ராஜாவாக வலம் காளைகள் மண்ணின் வீர உணர்வை நினைவுக்கூருபவை....
 
உலகெங்கிலும் உள்ள தமிழர்களை ஒன்றிணைத்து பல தடைகளை கடந்து வெற்றி கண்ட ஜல்லிக்கட்டு...  நம் பாரம்பரியத்தின் வீர சின்னம். 

திமில் திரண்ட காளைகளை, வலு நிறைந்த கரங்களால் அடக்க முற்படும் காளையர்களும் ஒரு நிமிடம் பின்வாங்கி விடுவார்களாம்... மைதானத்தில் செந்தில் தொண்டைமானின் 'பேட்ட காளி' களமிறங்கிறான் என்றால்.... 
தமிழகத்தின் டாப் - 10 காளைகளும் இலங்கை முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டைமானுக்கு சொந்தமானவை தான்... சிவகங்கை சீமையில் ஆளவிலாம்பட்டி தென்ன தோப்பின் நடுவே...  மார்கழி கதகதப்பில் பயிற்சி பெரும் காளைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்...

பொதுவாக காளைகளை தங்கள் வீட்டு பிள்ளைகளை போல் அவற்றின் உரிமையாளர்கள் பராமரிப்பது வழக்கம்... ஆனால் அவற்றிற்கெல்லாம் ஒரு படி மேல் சென்று சினிமா ஸ்டார் போல் போட்டிக்கு சென்று வர ஏசி பொருந்திய கேரவன், ஒவ்வொரு காளைக்கு ஏசி வசதியுடன் தனித்தனி அறை, காத்தாடி வசதி மற்றும் அவற்றிற்கு காவலாக வேட்டை நாய்கள் என பலத்த பந்தோபஸ்துக்கு இடையே பராமரிக்கப்படுகின்றன, இந்த காளைகள். 


Next Story

மேலும் செய்திகள்