"பொங்கல் பரிசுப் பொருட்களில் இந்தி வார்த்தைகள்" - ஓபிஎஸ் கண்டனம்

பொங்கல் பரிசுப் பொருட்களில் இந்தி வார்த்தைகள் இடம்பெற்றிருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
x
தமிழ் மீது மிகுந்த பற்றுடையது போல் காட்டிக் கொள்ளும் திமுக, பொங்கல் பரிசுத் தொகுப்பை வட மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்திருப்பது கண்டனத்துக்கு உரியது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், தமிழர் திருநாளான பொங்கலையொட்டி, குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் பொங்கல் தொகுப்பு பொருட்களை வட மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்திருப்பதாக கூறியுள்ளார். மேலும், அதில், இந்தி வார்த்தைகள் இடம்பெற்றிருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது அவர் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்