குறைந்து வரும் இன்ஜினியரிங் மோகம் - இந்த ஆண்டு 70,437 இடங்கள் காலி

பொறியியல் படிப்புகளில், நடப்பாண்டில் 70 ஆயிரத்து 437 இடங்கள் காலியாக இருப்பதாக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
x
நடப்பு கல்வி ஆண்டில் பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு சமீபத்தில் நடந்து முடிந்தது . இந்த நிலையில் இறுதிகட்ட புள்ளிவிவரங்களை, மாணவர் சேர்க்கையை நடத்திய தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, அரசு ஒதுக்கீட்டின் கீழ் இருந்த ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 870 இடங்களில், 95 ஆயிரத்து 336 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. எனினும், 81 ஆயிரத்து 433 மாணவர்கள் மட்டுமே சேர்ந்தனர். இதனால், 70 ஆயிரத்து 437 இடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்