தனியாகத் தவித்த சிறுவனுக்கு தாயாக மாறிய பெண்! - ஒரு நெகிழ்ச்சி கதை
பதிவு : ஜனவரி 11, 2022, 04:29 PM
கள்ளக்குறிச்சியில் பேருந்து நிலையத்தில் கூழ் குடிக்கவந்தவர் விட்டுச் சென்ற சிறுவனை, கூழ் விற்கும் பெண்மணி மனிதநேயத்துடன் தாயாக பராமரித்து வருகிறார்.
கள்ளக்குறிச்சியில் பேருந்து நிலையத்தில் கூழ் குடிக்கவந்தவர் விட்டுச் சென்ற சிறுவனை, கூழ் விற்கும் பெண்மணி மனிதநேயத்துடன் தாயாக பராமரித்து வருகிறார்.  

தனக்கு என்ன நேர்ந்தது என தெரியாது மனம் போன போக்கில் விளையாடிக் கொண்டிருக்கும் இந்த 4 வயது சிறுவனை, கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் மர்மநபர் ஒருவர் விட்டுச் சென்றுள்ளார்.  

கடந்த சனிக்கிழமை பேருந்து நிலையத்தில் கூழ் விற்கும் கமலாவிடம், மாலை 4 மணி அளவில் கூழ் வாங்கி குடிக்கவந்த மர்மநபர், கூழ் குடிவித்துவிட்டு சிறுவனுக்கும் கொடுத்துள்ளார். அப்போது 10 நிமிடங்கள் சிறுவனை பார்த்துக்கொள்ளுமாறு கமலாவிடம் சிறுவனை ஒப்படைத்துவிட்டு சென்றவர் இரவு 8 மணி வரையிலும் வரவில்லை. இதனையடுத்து கமலா, சிறுவனை அழைத்துக்கொண்டு கள்ளக்குறிச்சி காவல் நிலையத்திற்கு சென்று நடந்ததை கூறியிருக்கிறார். 

அப்போது சிறுவனிடம் போலீசார் எவ்வளவு பேசியும், சிறுவனின் தாய்-தந்தை யார்? அழைத்து வந்தவர் யார்? என்பது குறித்து எந்தஒரு தகவலும் பெற முடியவில்லை. இதனையடுத்து சிறுவனுக்கு புதிய உடைகளை வாங்கி கொடுத்த போலீசார், கமலாவிடமே சிறுவனை பார்த்துக் கொள்ளுமாறு கூறியுள்ளனர். கமலாவின்  வீட்டிற்கு சென்ற சிறுவன் அங்கிருந்தவர்களுடன் எளிதாக ஒட்டிக்கொண்டதுடன், மகிழ்ச்சியாக இருந்து வருகிறான். 

சிறுவனை குளிப்பாட்டி, பவுடர் பூசி தாயைபோன்று கமலா பராமரிப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையை யாரோ அடிமையாக வைத்துள்ளனர் எனக் கமலா கூறுகிறார். 

இது தொடர்பாக தந்தி தொலைக்காட்சியில் செய்தி வெளியானதை அடுத்து, சிறுவனை மீட்ட கள்ளக்குறிச்சி போலீசார், சிறுவனை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு பெண்கள் விடுதியில் ஒப்படைத்துள்ளனர். 


சிறுவன் எப்போதாவது தந்தை பெயர் சக்திவேல் என்றும் தாய் பெயர் பொக்கம்மா என கூறுவதாகவும் கூறப்படுகிறது. 

ஏற்கனவே விழுப்புரத்தில் 4 வயது சிறுவன் இறந்த நிலையில் தள்ளுவண்டியில் போடப்பட்டிருந்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. 

இந்த நிலையில் தற்போது இந்த சிறுவனை கொண்டுவந்துவிட்டவர் யார் என்ற விசாரணையை தீவிரப்படுத்தியிருக்கும் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.  

இதற்கிடையே சிறுவனை அவனது பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

113 views

மீண்டும் மோதும் CSK Vs SRH பழி தீர்க்குமா சென்னை அணி..!

புனேவில் நடைபெறும் 46வது லீக் போட்டியில் சென்னையுடன் ஹைதராபாத் அணி மோதுகிறது.

85 views

(24/02/2022) ஆயுத எழுத்து - உக்ரைன் போரும் இந்தியாவுக்கான சவால்களும்

(24/02/2022) ஆயுத எழுத்து - உக்ரைன் போரும் இந்தியாவுக்கான சவால்களும்.. சிறப்பு விருந்தினர்களாக - சாய் கிரண், பத்திரிகையாளர் // சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர் // மதன்குமார், ராணுவம்(ஓய்வு) // ரகுநாதன், பொருளாதார நிபுணர் // மாணவி மௌனி சுகிதா, உக்ரைன்

83 views

'தளபதி 66' அப்டேட் !

'தளபதி 66' அப்டேட் !

69 views

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

48 views

பிற செய்திகள்

குன்னூர் ராணுவத்தினரின் பேண்டு வாத்தியம் - வெகுவாக ரசித்த முதல்வர் ஸ்டாலின்

குன்னூர் ராணுவத்தினரின் பேண்டு வாத்தியம் - வெகுவாக ரசித்த முதல்வர் ஸ்டாலின்...

29 views

#BREAKING || விசா முறைகேடு வழக்கு - முன்ஜாமின் கேட்டு கார்த்தி சிதம்பரம் மனு

விசா முறைகேடு வழக்கு - முன்ஜாமின் கேட்டு கார்த்தி சிதம்பரம் மனு...

36 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (20.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (20.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

44 views

#BREAKING || காவிரி கரையோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

காவிரி கரையோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை...

72 views

சுற்றுலா பயணிகளை கவரும் நெதர்லாந்து லில்லியம் மலர்கள்.!

சுற்றுலா பயணிகளை கவரும் நெதர்லாந்து லில்லியம் மலர்கள்...

28 views

இளைஞரை செருப்பால் அடித்த மாணவி; மாணவிக்கு விஷ குளிர்பானத்தை வலுகட்டாயமாக குடிக்க வைத்த கும்பல்

இளைஞரை செருப்பால் அடித்த மாணவி; மாணவிக்கு விஷ குளிர்பானத்தை வலுகட்டாயமாக குடிக்க வைத்த கும்பல்

154 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.