பொங்கல் பண்டிகை - கோயம்பேடு சந்தையில் களைகட்டும் விற்பனை

பொங்கல் பண்டிகையை ஒட்டி, கோயம்பேடு சந்தையில் விற்பனை களைகட்டி வருகிறது...
x
பொங்கல் பண்டிகை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட் கரும்பு மஞ்சள் விற்பனை களை கட்டி வருகிறது


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு காய்கறி சந்தையில் கரும்பு மஞ்சள் ஆகியவற்றை வாகனத்துக்கு 2000 முதல் 2500 வரை பெற்றுக்கொண்டு வெளியூர் திடீர் வியாபாரிகளுக்கு நேரடி விற்பனை செய்ய அனுமதி வழங்கியுள்ள CMDA MMC நிர்வாகம்.

கோயம்பேடு உரிமம் பெற்ற ஒழுங்கு முறை விற்பனைக்கூட வியாபாரிகள்
இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பரவலை காரணம்காட்டி சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பொங்கல் விழா நெருங்குவதை முன்னிட்டு விழாக்கால சிறப்பு சந்தைக்கு முறையாக நோட்டீஸ் அனுப்பி உரிமம் பெற்ற ஒழுங்கு முறை விற்பனை கூட வியாபாரிகளை முறையாக அழைத்து பொது ஏலம் நடத்தாமல்.

புதிய வெளியூர் வியாபாரிகளுக்கு ஒரு வாகனத்துக்கு 2000 முதல் 2500 வரை பெற்றுக்கொண்டு கோயம்பேடு CMDA அங்காடி நிர்வாகம் சிறப்பு அனுமதியை வழங்கியுள்ளது.

மேலும்  CMDA நிர்வாக அங்காடி யின் இந்த செயல் கோயம்பேடு ஒழுங்கு முறை விற்பனை வியாபாரிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெளியூரிலிருந்து சிறிய  ரக வாகனங்களிலேயே வைத்து கருவேப்பிலை, கொத்தமல்லி விற்பனை செய்யும் மையத்தில் வைத்து கரும்பு, மஞ்சள் ஆகியவற்றை வெளியூர் வியாபாரிகள் வியாபாரம் செய்வதால் கோயம்பேடு மொத்த வியாபாரிகள் பெருத்த நஷ்டம் ஏற்படுவதாக புகார் தெரிவித்து உள்ளனர்.

இது தொடர்பாக கோயம்பேடு அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டமைப்பு தலைவர்களிடம் கேட்டபோது ஏலம் நடத்தாமல் கடைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும்

ஏற்கனவே நஷ்டத்தில் உள்ள வியாபாரிகள் விழாக்காலங்களில் வியாபாரம் செய்ய விடாமல் CMDA அங்காடி நிர்வாகத்தை வன்மையாக கண்டிப்பதாக வியாபாரிகள் சங்கத்தினர் வேதனையுடன் கூறுகின்றனர். கொரோனா உடனே பயன்படுத்தி பண்டிகைக்கால வியாபாரத்தை அதிகாரிகள் முறைகேடாக பயன்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்