தொலைபேசியில் அழைத்தால் போதும் ... வீட்டிற்க்கே சென்று தடுப்பூசி..

தொலைபேசியில் அழைத்து தகவல் தெரிவித்தால் 60 வயதுக்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு இல்லத்திற்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
x
தொலைபேசியில் அழைத்து தகவல் தெரிவித்தால் 60 வயதுக்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு இல்லத்திற்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.இது தொடர்பாக  சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இணை நோயுடன் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு பூஸ்டர்  தடுப்பூசியை இல்லத்திற்கே சென்று செலுத்த நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து  1913, 044-25384520, மற்றும் 044-48122300 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் 60 வயதை கடந்து முதல் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்களும்  இரண்டாம் தவணை தடுப்பூசியை செலுத்த வேண்டிய நாட்களை கடந்தவர்களும்  தொலைபேசி வழியே தொடர்புகொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என்றும், பதிவு செய்துகொண்டவர்களுக்கு அவர்களது இல்லங்களுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படும் எனவும்  சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்