செவிலியர் அஜாக்கிரதையால் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு 3 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

செவிலியர் அஜாக்கிரதையால் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு 3 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
x
செவிலியர் அஜாக்கிரதையால் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு 3 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு 

அரசு மருத்துவமனை செவிலியர் அஜாக்கிரதையான செயல்பாட்டால், உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.கரூர் மாவட்டம், ராயனூரைச் சேர்ந்த கணேசன் என்பவர், கடந்த 2017 ஆம் ஆண்டு தனது மனநலம் பாதிக்கப்பட்ட மகனை காய்ச்சல் காரணமாக, கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். திடீரென காய்ச்சல் அதிகமானதால், அதுகுறித்து பணியில் இருந்த ஆண் செவிலியர் கார்த்திக்கிடம் தெரிவித்துள்ளார். ஆனால் கார்த்திக், தனது செல்போனில் படம் பார்த்துக் கொண்டிருந்ததாகவும், இதனால் தனது மகன் இறந்து விட்டதாக கூறி, மனித உரிமை ஆணையத்தில் கணேசன் புகார் அளித்தார். இந்த புகாரை விசாரித்த மனித உரிமை ஆணைய உறுப்பினர் துரை ஜெயச்சந்திரன், அஜாக்கிரதையாக செயல்பட்ட செவிலியர் கார்த்திக் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட கணேசனுக்கு மூன்று லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்